LATEST NEWS
“ஆடு மாடு திருடுறவரை திருடன்னு சொல்றோம்… MLA-வை திருடுற உங்களை என்ன சொல்றது..?” நீங்கள் தூயசக்தி அல்ல…திருட்டு சக்தி… முதல்வர் விஜய்யை கிழி கிழின்னு கிழித்த எடப்பாடி பழனிசாமி..!!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குதிரை பேரத்தில் விலைபோய் தவெகவுக்குச் சென்றுவிட்டதாகவும், முதல்வர் தனது ஆட்சியைத் தக்கவைக்க ராஜினாமா செய்யவைத்து இணைத்துக் கொண்டதாகக் கூறினார். ஆடு, மாடு திருடுபவரை திருடன் என்று சொல்வது போல எம்.எல்.ஏ.க்களை திருடும் விஜய் தூய சக்தி அல்ல, திருட்டு சக்தி என்று விமர்சித்த அவர், பறிபோன அதிமுகவின் இந்தச் சொத்தை மக்கள் மீட்டுக்கொடுக்க வேண்டும் என நீதிகேட்டுப் பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சிக்கு போனால்தான் நிறைய செய்ய முடியும் எனக் கூறி மூட்டை மூட்டையாக வாங்குவதையே வேட்பாளர் குறிப்பிடுகிறார் என்றும், இதைப் பார்த்து விஜய் நடிப்பதையெல்லாம் திரைப்படத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சாடினார். கிராமம் தோறும் விஜய் சென்றாலும் மக்கள் அவரைப் புரிந்துகொண்டதால் ஓட்டுப்போட மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், போதை பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், மின்வெட்டு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத இந்த அரசு ஒரு நிர்வாக திறமையற்ற அரசு என்றும், ஏழைகளைப் பற்றி கவலைப்படாத காஸ்ட்லி முதல்வர் என்றும் விமர்சித்தார்.
மேலும், தவெக ஆரம்பித்து 3 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் அதிமுகவை ‘மற்றும் பலர்’ என்று விஜய் கூறியதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அந்த மற்றும் பலரான தனது வீட்டில்தான் விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார் என்பதை நினைவூட்டினார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் விஜய் தனது பட ரிலீஸ் பிரச்சனைக்காக வந்தபோது, மத்திய அரசுடன் தொடர்புகொண்டு பேசி படம் வெளியாகத் துணை நின்ற நன்றிகூட விஜய்க்கு இல்லை என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, தலைவர் முதல் தொண்டர் வரை நன்றியோடு இருப்பது அதிமுக மட்டுமே என்றும் பேசினார்.
