அடச்சீ இவனெல்லாம் மனுஷ பிறவியா..? பேண்ட் ஜிப்பை திறந்து… ஷாப்பிங் மாலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. சிசிடிவியில் சிக்கிய வெப் டிசைனரின் வக்கிர புத்தி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ இவனெல்லாம் மனுஷ பிறவியா..? பேண்ட் ஜிப்பை திறந்து… ஷாப்பிங் மாலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. சிசிடிவியில் சிக்கிய வெப் டிசைனரின் வக்கிர புத்தி..!!

Published

on

குஜராத் மாநிலம் சூரத் மோட்டா வரச்சா பகுதியில் உள்ள பிரபல ஏ.ஆர். மாலில் , முகவரி கேட்பது போல நடித்து இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்ரான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த மாலின் நான்காவது மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு லாபியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், குறிப்பிட்ட ஒரு கடையின் முகவரியைக் கேட்பது போல அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் முகவரியைக் கூறிக்கொண்டிருந்த போதே, அந்த வாலிபர் திடீரென தனது பேண்ட் ஜிப்பை திறந்து, தனது பிறப்புறுப்பைக் காட்டி ஆபாசமான சைகைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் பயந்து அலறிக்கொண்டு உடனடியாகத் தனது அலுவலகத்திற்குள் ஓடித் தப்பியுள்ளார். அவர் தனது சக ஊழியர்களிடமும் குடும்பத்தினரிடமும் நடந்ததைக் கூறியதை அடுத்து, அவர்கள் அந்த நபரைத் தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் மாலிலிருந்து தப்பியோடிவிட்டார்.

Advertisement

மாலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த ஒட்டுமொத்த கொடூரச் செயலும் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான பொதுமக்களின் கண்டனங்களை எழுப்பியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய சூரத் உத்ரான் போலீசார், பூனா பகுதியைச் சேர்ந்த பௌதிக் வகேலா (20) என்ற அந்த காமுகனை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். ஐடி பார்க் ஒன்றில் வெப் டிசைனராகப் பணிபுரிந்து வரும் இந்த வாலிபர் மீது போலீசார் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in