CRIME
“சொந்த பந்தங்களே செய்த துரோகம்…!” விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாற்றுத்திறனாளி முதியவர்.. கதறி அழும் மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், நிலத்தை அபகரிக்கும் பேராசையால் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தனது விவசாய நிலத்திற்குச் சென்ற முதியவர், அங்கு உடல் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். கணவரின் உடலைப் பார்த்து அவரது மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலை வழக்கின் முதற்கட்ட விசாரணையில், முதியவரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறவினர்களே நிலத் தகராறு காரணமாக இந்தத் துணிகரப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த இரு உறவினர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொத்துக்காகப் பாதுகாப்பற்ற ஒரு மாற்றுத்திறனாளி முதியவரைச் சொந்தக் குடும்பத்தினரே இரக்கமின்றித் தீர்த்துக் கட்டிய இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
