CRIME
“அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்…” வாட்ஸ்அப்பில் வெளியான மரண ஸ்கெட்ச்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய பியூட்டி பார்லர் அழகி.. நடுங்க வைக்கும் பின்னணி..!1
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறி நாடகமாடி சடலத்தைக் அடக்கம் செய்த பியூட்டிஷியன் மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற திடுக்கிடும் உண்மை வாட்ஸ்அப் சாட்டிங் மூலம் அம்பலமாகியுள்ளது. முசாபர்நகரைச் சேர்ந்த தாலிப் என்பவருக்கும் இல்மா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தற்போது ஜாகிர் நகரில் வசித்து வந்துள்ளனர். இல்மா ‘சிக்னேச்சர் ஸ்டைல் பியூட்டி ஸ்டுடியோ’ என்ற பார்லரில் வேலை செய்து வந்தபோது, அதன் உரிமையாளர் அமானுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தாலிப் பலமுறை கண்டும்பிடித்துக் கண்டித்ததால், தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த தாலிபைக் கொலை செய்ய இல்மாவும் அமானும் தங்களது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் தாலிபைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் குடும்பத்தினரை நம்ப வைத்துச் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு, தாலிபின் சகோதரர் இல்மாவின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது, அவருக்கும் பியூட்டி பார்லர் உரிமையாளர் அமானுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் சாட்டிங்குகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் தாலிபைக் கொலை செய்தது மற்றும் அதனை மறைக்கத் தீட்டிய திட்டங்கள் துல்லியமாக இருந்ததைக் கண்டு அவர் போலீஸாரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, புதைக்கப்பட்ட தாலிபின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
