LATEST NEWS
CM விஜய் ஒரு அறிவிக்கப்படாத அடிமை..! உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு..!!
டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை முதலமைச்சர் விஜய் நிரூபித்துள்ளதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான சட்டப் போராட்டக் குழுவான சி.ஜே.பி-க்கு ஆதரவாகச் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நடவடிக்கைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தைக் காக்கத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது எனத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த ‘டம்மி’ முதலமைச்சர் யாருக்குப் பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார் என்றும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டிப்பதாகவும் அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
