CRIME
அடக்கடவுளே.. ரூ.20 லட்சத்திற்கு ஆசைப்பட்டு வாட்ச்மேன் செய்த பகீர் காரியம்.. 5 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் பொல்லாரத்தின் கவுகூரா பகுதியில் உள்ள ஆர்ச்சிட் வில்லா குடியிருப்பில் இருந்து, 5 வயது சிறுமி அரேலியா கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வில்லாவில் காவலாளியாகவேலை பார்த்து வந்த விக்ரம் என்பவரே அச்சிறுமியைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியை விடுவிக்க அவளது குடும்பத்தினரிடம் கடத்தல்காரர்கள் 20 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கேட்டு மிரட்டிய அதிர்ச்சித் தகவலும் தற்போது விசாரணையில் வெளிவந்துள்ளது.
சிறுமி கடத்தப்பட்டது குறித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியையும், தப்பியோடிய காவலாளி விக்ரமையும் கண்டுபிடிப்பதற்காகப் போலீசார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அடர்ந்த பகுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் தேடுவதற்காக நவீன ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தியும் போலீசார் வான்வழியாகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
