“அய்யோ நெஞ்சை நடுங்குது..” கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்த புலி.. நொடிப்பொழுதில் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்.. பூங்காவில் நடந்த கொடூரம்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ நெஞ்சை நடுங்குது..” கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்த புலி.. நொடிப்பொழுதில் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்.. பூங்காவில் நடந்த கொடூரம்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி..!!!

Published

on

இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே உள்ள யார்க்ஷயர் விலங்கு பூங்காவில் நேற்று மதியம் புலி அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர், புலி தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவிற்கு வந்த அந்த நபர், புலி இருக்கும் பகுதிக்குள் எப்படி அல்லது ஏன் நுழைந்தார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. இத்தாக்குதலில் புலிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அது பாதுகாப்பாகத் தனது கூண்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வார இறுதி நாட்கள் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக இந்த விலங்கு பூங்கா உடனடியாக மூடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புலி கூண்டுக்குள் அந்த நபர் எப்படிச் சென்றார் என்பது குறித்துப் போலீசார் மற்றும் பூங்கா நிர்வாகத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்கு பூங்காவில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in