CRIME
3 நாட்களாக ஹோட்டல் அறையில் காதலர்கள்.. காலையில் ரொம்ப நேரமாக திறக்காத கதவு… காதலி கிடந்த அந்த கோலம்… அதிர்ச்சியில் உறைந்த ஹோட்டல் ஊழியர்கள்..!!
டெல்லிக்கு அருகில் உள்ள ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஆக்ராவைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் அதிதி என்பவர் தூக்கிட்ட நிலையில் இறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காதலன் ஹேமந்த் ஷர்மாவின் அழைப்பை ஏற்று ஃபரிதாபாத்திற்கு வந்த அதிதி, கடந்த மூன்று நாட்களாக அந்த ஹோட்டல் அறையில் அவருடன் தங்கியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவில், காதலன் ஹேமந்த் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அதிதி சடலமாகத் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற இரண்டு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான காதலனைத் தேடும் பணியிலும் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
