CRIME
“மாரடைப்புனு சொல்லி புதைச்சாச்சு, ஆனா..?” கணவனின் கல்லறையைத் தோண்ட வைத்த திடுக்கிடும் ட்விஸ்ட்.. அம்பலமான மனைவியின் கொடூர முகம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!1
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடி சடலத்தைப் புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. முசாபர்நகரைச் சேர்ந்த தாலிப் என்ற வாலிபர், மீரட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28 அன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி இல்மா, கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி குடும்பத்தினரை நம்ப வைத்து, முறைப்படி சடலத்தை அடக்கம் செய்துள்ளார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தாலிப்பின் மொபைல் போன் கிடைத்ததை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுப் போலீசில் புகார் அளித்தனர்.
குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, மரணம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு தாலிப்பின் சடலம் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மனைவி இல்மா தனது கள்ளக்காதலன் அமனுடன் சேர்ந்து, கணவனின் உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், இல்மா கணவனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, கள்ளக்காதலன் அமன் துப்பட்டாவால் தாலிப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமானது. இந்த கொடூரக் கொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட மனைவி இல்மாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தப்பியோடிய கள்ளக்காதலன் அமனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
