“திக் திக் திக்.. நடுவானில் பறந்த இண்டிகோ விமானம்.. திடீரென வெடித்த தீப்பிழம்பு.. அலறிய பயணிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திக் திக் திக்.. நடுவானில் பறந்த இண்டிகோ விமானம்.. திடீரென வெடித்த தீப்பிழம்பு.. அலறிய பயணிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக, ஹைதராபாத் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் மேல்புற லக்கேஜ் வைக்கும் அறையிலிருந்து திடீரெனப் புகையும் தீயும் கசிந்ததால், பயணிகள் மத்தியில் பெரும் பயமும் சலசலப்பும் ஏற்பட்டது.

இதனைத் தற்செயலாகக் கவனித்த விமானப் பணியாளர்கள், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு விமானத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த ஏர்பஸ் A321neo விமானத்தை, பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானிகள் அவசர அவசரமாக ஹைதராபாத்திற்குத் திருப்பிப் பத்திரமாகத் தரையிறக்கினர். இந்தச் சமயோசித நடவடிக்கையால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in