எம்மாடியோ…! டீ குடிச்சிட்டு போனை பார்த்துட்டு இருந்த இளைஞர்… மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்… நூலிழையில் தப்பிய உயிர்..! பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

எம்மாடியோ…! டீ குடிச்சிட்டு போனை பார்த்துட்டு இருந்த இளைஞர்… மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்… நூலிழையில் தப்பிய உயிர்..! பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகர் ஆற்றுப்பாலம் அருகில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, நள்ளிரவு 1 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டீக்கடைக்கு வந்துள்ளனர். அதில், ஒருவர் சாலையோரத்தில் பைக்கில் அமர்ந்தபடி மொபைல் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக பைக் மீது மோதியது. இதில், பைக் தூக்கி வீசப்பட்டு பைக்கில் இருந்த இளைஞர் கீழே விழுந்தார். தூக்கிவீசப்பட்ட பைக் எதிரே அமர்ந்திருந்த மற்றொருவர் மீது விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/DeWkAWfx792/?utm_source=ig_web_button_share_sheet

காயமடைந்தவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தண்டர்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in