இப்படியா சாவு வரணும்..? மசூதியில் தொழுகையின்போது திடீர் மாரடைப்பு… கூலித் தொழிலாளி பரிதாப மரணம் – சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படியா சாவு வரணும்..? மசூதியில் தொழுகையின்போது திடீர் மாரடைப்பு… கூலித் தொழிலாளி பரிதாப மரணம் – சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேசம் சகாரன்பூர் மாவட்டத்தின் கங்கோஹ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாராபத் அலி என்ற நபர் தொழுகைக்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குத் தொழுகைக்கு முன்பு உளு (அதாவது அங்கசுத்தி) செய்யும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

இறந்த சாராபத் அலி ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவர் தனது குடும்பத்தின் ஒரே ஆதரவாகவும், வயதான பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட ஏழைக் குடும்பத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர் கடுமையான பொருளாதாரச் சிக்கலையும் மிகுந்த துயரத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in