LATEST NEWS
“அடக்கடவுளே..” பேசிக்கொண்டிருக்கும்போதே சுருண்டு விழுந்த நபர்.. கோழி வாங்கச் சென்ற இடத்தில் உறைந்துபோன நொடிகள்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம், சிலுகூரு மண்டலத்தில் உள்ள பெடவோலு கிராமத்தில் கோழி வாங்குவதற்காகச் சென்ற பெஜவாடா ஸ்ரீனிவாஸ் என்ற நபர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர் கோழிப் பண்ணையில் வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்து தரையில் விழுந்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் முழுமையான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.
ஸ்ரீனிவாஸ் மயங்கி விழுந்ததைக் கண்டதும் அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, அவருக்கு முதலுதவியாக சிபிஆர் வழங்கி உயிரைக் காப்பாற்றப் போராடியுள்ளனர். பின்னர் அவரை அவசர அவசரமாகக் கோதாடா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீனிவாஸ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். அண்மைக்காலமாக இளம் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
