ஐயோ கடவுளே.. கழிவறையில் மயங்கி விழுந்து 6 மாதக் கர்ப்பிணி… அடுத்த நொடியே தாயுக்கும் சேயுக்கும் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. கழிவறையில் மயங்கி விழுந்து 6 மாதக் கர்ப்பிணி… அடுத்த நொடியே தாயுக்கும் சேயுக்கும் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி பகுதியில், ஆறு மாதக் கர்ப்பிணியான சங்கரேஸ்வரி (36) என்ற பெண் கழிவறையில் மயங்கி விழுந்து பிரசவித்த நிலையில், தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று காலை சங்கரேஸ்வரிக்குத் திடீரென வயிற்று வலி அதிகரித்துள்ளது. அது வழக்கமான வயிற்று உபாதையாக இருக்கும் எனக் கருதி அவர் கழிவறைக்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கே மயங்கி விழுந்துள்ளார். அந்த நிலையிலேயே அவருக்குக் குறைப் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கழிவறையில் தாய் மற்றும் குழந்தை ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு அவசர அவசரமாகச் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து குறித்துத் திருத்தங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in