CRIME
“அடக் கொடுமையே.. தண்ணீரைப் பார்த்தாலே மரண பயம்… நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்தில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவன், கடுமையான தாகம் இருந்தும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவிக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்த போது, அதற்குரிய தகுந்த தடுப்பூசியைச் செலுத்தாததால், அந்தத் கொடூர வைரஸ் படிப்படியாக அவனது மூளையைக் கட்டுப்படுத்தியுள்ளது. தண்ணீரைப் பார்த்தாலே ஏற்படும் பயம் காரணமாக, அவனது தொண்டைச் சதைகள் சுருங்கி, தாகத்திற்காகத் தரப்படும் தண்ணீரை அவனது உடலே துப்பக் கட்டாயப்படுத்துகிறது.
இது ரேபிஸ் நோயின் இறுதி மற்றும் மிகக் கொடூரமான கட்டமாகும்; இந்த நிலையை அடைந்த பிறகு மருத்துவ உலகிலேயே இதற்கு எந்தவிதமான சிகிச்சையோ அல்லது குணப்படுத்தக் கூடிய மருந்தோ இல்லை என்பதுதான் சோகமான உண்மை. நாய் கடித்த 2 மாதங்களுக்குப் பிறகு இந்த வைரஸ் மூளையைத் தாக்கியுள்ள நிலையில், அந்தச் சிறுவன் மரணத்தின் விளிம்பில் வலியை அனுபவித்து வருகிறான். நாய் அல்லது பூனை கடித்த உடனே அலட்சியமாக இருக்காமல், உடனடியாக உரிய ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உணர்த்தியுள்ளது.
