“நம்ம வீட்டுக்கு வா..!” என் வரவழைத்துபோதை கணவனின் கொடூர வெறிச்செயல்.. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நம்ம வீட்டுக்கு வா..!” என் வரவழைத்துபோதை கணவனின் கொடூர வெறிச்செயல்.. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் டெஹ்லி கேட் காவல் எல்லைக்குட்பட்ட பிரேம் நகர் பகுதியில், போதைக்கு அடிமையான ஷோபித் என்ற கணவன் தனது மனைவியின் தலையில் கத்தரிக்கோலால் கொடூரமாகப் பலமுறை குத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவி வேலைக்குச் செல்வது பிடிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தாய் வீட்டிலிருந்த மனைவியைத் தனது வீட்டிற்கு வரவழைத்து இக்கொடூரத் தாக்குதலை ஷோபித் அரங்கேற்றியுள்ளார். இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண், உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நிலைமை மிகவும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைக்காக ஜே.என் மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இக்கொடூரத் தாக்குதலை நடத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட கணவன் ஷோபித் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த டெஹ்லி கேட் காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கொடூரக் கணவனைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in