“தேர்தல் சீட்டுக்காக அவசரக் கல்யாணம்.. ஆனா..” டிடிபி பிரமுகருக்கு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. சாலூரு நகராட்சியில் அரங்கேறிய விசித்திர அரசியல் நாடகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தேர்தல் சீட்டுக்காக அவசரக் கல்யாணம்.. ஆனா..” டிடிபி பிரமுகருக்கு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. சாலூரு நகராட்சியில் அரங்கேறிய விசித்திர அரசியல் நாடகம்..!!

Published

on

தேர்தல் அரசியலில் பதவி நாற்காலியைக் கைப்பற்றுவதற்காக, ஜோதிடம் மற்றும் சுபமுகூர்த்த நாள்களைக் கூடப் பார்க்காமல் அவசரமாகக் காதல் திருமணம் செய்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் ஒருவருக்குக் கடுமையான ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சாலூரு நகராட்சித் தலைவர் பதவி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து, டிடிபி பிரமுகரான ஹர்ஷவர்தன், தான் காதலித்து வந்த மஞ்சித்ரா என்ற பெண்ணை அவசர அவசரமாக ஒரு கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொண்டார். தான் திருமணம் செய்துகொண்டால், தனது மனைவிக்குக் கட்சியின் சார்பில் நகராட்சித் தலைவர் சீட் கிடைக்கும் என்ற அரசியல் கணக்கிலேயே இந்தத் திருமணம் யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடத்தப்பட்டது.

ஹர்ஷவர்தன் மற்றும் மஞ்சித்ரா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததோடு, இன்னும் ஆறு மாதங்களில் முறைப்படி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நகராட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்து இந்தத் திருமணத்தை அவர் முன்கூட்டியே நடத்தினார் . துரதிர்ஷ்டவசமாக, டிடிபி கூட்டணியின் இறுதி இடப்பங்கீட்டின்போது, சாலூரு நகராட்சித் தலைவர் பதவி ஜனசேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தனது மனைவி மூலம் பதவியைக் கைப்பற்ற நினைத்த ஹர்ஷவர்தனின் அரசியல் கனவுகள் அனைத்தும் முற்றிலும் தகர்ந்து, இறுதியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in