“அய்யோ.. கருப்பை வெடித்து வெளியே வந்த குடல்..” இரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமி… போலி டாக்டரின் கொடூரச் செயலால் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ.. கருப்பை வெடித்து வெளியே வந்த குடல்..” இரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமி… போலி டாக்டரின் கொடூரச் செயலால் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட தவறான கருக்கலைப்பால் சிறுமி ஒருவரின் கருப்பை மற்றும் குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பள்ளி மாணவி கர்ப்பமடைந்ததை மறைப்பதற்காக, குடும்பத்தினர் ‘பரம் மருத்துவமனை’ என்ற பெயரில் அனுமதியின்றிச் செயல்பட்ட போலி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கே.பி. மிஸ்ரா என்ற போலி மருத்துவர் முறையான மருத்துவ அறிவு இல்லாமல் செய்த ஆபத்தான செயலால் சிறுமியின் கருப்பை வெடித்ததுடன், அவரது குடலும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

கருக்கலைப்பின் போது அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுமியின் உயிர் ஆபத்தான கட்டத்தை எட்டியதை அடுத்து, பெற்றோர் அவரை முதலில் பஸ்தியிலும், பின்னர் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் உடனடியாக அவசரகால அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர். எனினும், குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டதால் அதை மருத்துவர்களுக்கு அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், சிறுமியின் உடல்நிலை தற்போதும் கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் போலி மருத்துவமனையைச் சீல் வைத்துப் பூட்டியுள்ளனர். மேலும், அனுமதியின்றிப் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நிகம் எச்சரித்துள்ளார். சிறுமி முழுமையாக நலம் பெற்றவுடன் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in