“நீதி கிடைக்கும் வரை அடக்கம் செய்ய மாட்டோம்..” 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட விவசாயியின் உடல்.. இறுதியில் நடந்த ஆக்‌ஷன்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீதி கிடைக்கும் வரை அடக்கம் செய்ய மாட்டோம்..” 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட விவசாயியின் உடல்.. இறுதியில் நடந்த ஆக்‌ஷன்..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கோவிந்தபூர் கிராமத்தில் குல்தீப் சிங் என்ற 38 வயது விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார். கிராமத்தில் நடந்த சிறிய அளவிலான வாய் தகராறுக்குப் பிறகு, குற்றவாளிகள் அவரைத் திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவரின் மனைவியின் புகாரின்படி, முக்கியக் குற்றவாளியான சைலேந்திர குமார் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த குல்தீப் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தச் கொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் இறுதிச் சடங்கை நடத்த மறுத்துவிட்டனர். இதனால் குல்தீப் சிங்கின் உடல் மூன்று நாட்களாக அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டு இருந்தது, இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையில், மரணமடைந்த விவசாயியின் சகோதரர் இந்திய ராணுவத்திலும், அவரது சகோதரி உத்தரப் பிரதேச காவல்துறையில் காவலராகவும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் ஊர் திரும்புவதற்காகக் காத்திருந்ததும் இறுதிச் சடங்கு தாமதமானதற்கான மற்றுமொரு முக்கியக் காரணமாக அமைந்தது.

Advertisement

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இதன் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான சைலேந்திர குமார், அவரது தந்தை பூபேந்திர குமார் மற்றும் அவர்களது உறவினரான பிரதீப் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 12 போர் நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in