CRIME
“என் உயிருக்கு ஆபத்து..!” நள்ளிரவில் தாய்க்கு வந்த போன் கால்… சில மணி நேரங்களில் காதலித்துத் திருமணம் செய்த இந்துப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு முகமது அர்சூ என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அங்கிதா குமாரி என்ற பெண், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அங்கிதாவின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கடத்தல் புகாரும் அளித்திருந்த நிலையில், அங்கிதா நீதிமன்றத்தில் தனது விருப்பப்படியே அர்சூவுடன் செல்வதாகக் கூறி அவருடன் வாழத் தொடங்கினார். இவர்களுக்கு 2023 இல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு அங்கிதா கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தப்பட்டதாகவும், இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கணவர் தரப்பில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 19, 2026 அன்று இரவு 11 மணியளவில் அங்கிதா தனது தாயைத் தொலைபேசியில் அழைத்து, தான் கொடூரமாக அடிபடுவதாகவும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 2 மணியளவில் அங்கிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என்றும், ‘லவ் ஜிஹாத்’ கோணத்திலும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அங்கிதாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
