“அடப்பாவமே..!” மது போதையில் உச்சகட்ட வெறி..! பெற்ற மகனின் கழுத்தை கோடரியால் அறுத்து எறிந்த தந்தை… பதற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே..!” மது போதையில் உச்சகட்ட வெறி..! பெற்ற மகனின் கழுத்தை கோடரியால் அறுத்து எறிந்த தந்தை… பதற வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உஸ்ஹைத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பச்சி கிராமத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு தந்தை தனது 35 வயது மகனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ராம் அவதார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் கொடூரச் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், குடும்பத்தில் சோகமும் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராம் அவதார் ஈ-ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். அவரது தந்தை நரேஷ் ஜாதவ் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராம் அவதாரின் மனைவி, வீட்டில் மாவு தீர்ந்துவிட்டதால் கிராமத்திற்குச் சென்று கோதுமை எடுத்து வருமாறு அவரிடம் கூறியுள்ளார். அதன்படி ராம் அவதார் கிராமத்திற்குச் சென்ற நிலையில், அவரது தந்தையும் அவரைப் பின்தொடர்ந்து கிராமத்திற்குச் சென்றுள்ளார். தகவலின்படி, தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் என்பதால், கிராமத்தில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

Advertisement

மது அருந்திய பிறகு இரவு நேரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தந்தை நரேஷ், வீட்டில் இருந்த கோடாரியைக் கொண்டு தனது மகனின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராம் அவதார் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிறகு தந்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in