ஒரே நேரத்தில் மாயமான 3 மாணவிகள்..  பள்ளிக்கு சென்றவர்களுக்கு என்ன நடந்தது..? பதறிப்போன கிராமம்… அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே நேரத்தில் மாயமான 3 மாணவிகள்..  பள்ளிக்கு சென்றவர்களுக்கு என்ன நடந்தது..? பதறிப்போன கிராமம்… அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – ஜோதி தம்பதியின் மகள்களான மகாலட்சுமி (10-ஆம் வகுப்பு) மற்றும் மகேஸ்வரி (9-ஆம் வகுப்பு) ஆகிய இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், மாணவிகள் இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவில் தங்கள் பாட்டியின் பராமரிப்பில் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (அக். 26) பள்ளிக்குச் சென்ற மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.

இதேபோல், இவர்களது உறவினரான நித்யா என்ற 8-ஆம் வகுப்பு மாணவியும் காணாமல் போயுள்ளார். இவருடைய பெற்றோரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், பாட்டி உண்ணாமலையின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். இவரும் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போனதால், அவர்கள் எங்கு சென்றனர், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

Advertisement

மூன்று மாணவிகளும் பள்ளிக்கு வந்தார்களா, பள்ளி முடிந்து எப்போது வெளியேறினர் மற்றும் கடைசியாக எங்கு காணப்பட்டனர் என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவர்கள் தாங்களாகவே எங்காவது சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காணாமல் போனார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே விழுப்புரத்தில் சிறுமி மாயமாகி 15 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில், தற்போது மீண்டும் மூன்று சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கண்டறிந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in