“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” சிறுவனைக் காற்றில் தூக்கி வீசிய சைக்கோ.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” சிறுவனைக் காற்றில் தூக்கி வீசிய சைக்கோ.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!!

Published

on

சிறுவன் ஒருவன் பட்டாசு வீசியதாகக் கூறி, ஆத்திரமடைந்த நபர் ஒருவர் அச்சிறுவனைக் கொடூரமான முறையில் தூக்கித் தரையில் வீசித் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரத் தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் தான் வேலை செய்யும் இடத்தை நோக்கிப் பட்டாசு ஒன்றை வீசி எறிந்ததாகவும், அதனால் ஏற்பட்ட எரிச்சலிலேயே தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் தனது செயலுக்குக் நியாயம் கற்பித்துள்ளார்.

இருப்பினும், ஒரு சிறிய சிறுவன் செய்த தவறுக்காக அவனைக் காற்றில் தூக்கி அநியாயமாகத் தரையில் வீசிய அந்த நபரின் கொடூரமான செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைத் தாக்கிய நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in