“அம்மா செத்துட்டாங்க.. கடைசி முறையா வந்து பாரு..” காவல் நிலையத்தில் அந்த 19 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா செத்துட்டாங்க.. கடைசி முறையா வந்து பாரு..” காவல் நிலையத்தில் அந்த 19 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் சந்தீபன் காட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணத்தில் அதிருப்தி அடைந்த 19 வயது இளம் பெண், தனது காதலன் அமர்தீப் ராய்தாஸ் என்பவருடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளார். ராஜு குப்தா மற்றும் பார்வதி (40) தம்பதியரின் மகளான அந்தப் பெண்ணிற்கு, நவம்பர் 25 அன்று திருமணம் நடத்தத் திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் 15 அன்று கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் பெண் தன் காதலனுடன் தப்பியோடியுள்ளார். இந்த அதிர்ச்சியையும் அவமானத்தையும் தாங்க முடியாமல், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான தாய் பார்வதி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தையின் புகாரின் பேரில் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் காதலர்களைக் கண்டுபிடித்தனர். அவளது தாய் இறந்துவிட்டதாகவும், இறுதிச் சடங்கிற்கு வருமாறும் போலீசார் எவ்வளவோ வற்புறுத்தியும் அந்தப் பெண் வர மறுத்துவிட்டார். தான் தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே காதலனுடன் வந்ததாகக் நீதிமன்றத்தில் அவர் கூறியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவரை காதலனுடன் செல்ல அனுமதித்தது. ஒரே நேரத்தில் மகளும் ஓடிப் போய், மனைவியையும் பறிகொடுத்து நிலைகுலைந்து போன தந்தை ராஜு குப்தா, தனது மனைவியின் 13-ஆம் நாள் காரியத்தோடு சேர்த்து, உயிருடன் இருக்கும் தனது மகளுக்கும் முறைப்படி ‘பிண்ட தானம்’ செய்து, அவளைத் தன் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக ஒதுக்கியுள்ளார். தன் மகளால்தான் தன் மனைவி இறந்தாள் என்று கதறிய அந்தத் தந்தை, தனது சொத்தில் ஒரு பைசா கூட அவளுக்குக் கொடுக்கப் போவதில்லை என்றும் சபதம் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in