“உடனே வந்துருவேன்மா..” அரை மணி நேரத்தில் நடந்த மர்மம்..! கடைக்குச் சென்ற 13 வயது சிறுமி திடீர் மாயம்..! கதறித் துடிக்கும் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடனே வந்துருவேன்மா..” அரை மணி நேரத்தில் நடந்த மர்மம்..! கடைக்குச் சென்ற 13 வயது சிறுமி திடீர் மாயம்..! கதறித் துடிக்கும் குடும்பம்..!!

Published

on

ஹைதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்த ராதிகா பாஹேஷ்வர் என்ற சிறுமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார்.

காச்சிகுடாவில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரி நந்தா கிஷோர் வீட்டில் ராதிகா தங்கி வந்துள்ளார். இந்நிலையில், இந்த மாதம் 27-ஆம் தேதி இரவு 8:30 மணியளவில், அருகில் உள்ள கடைக்குச் சென்று விரைவில் திரும்பி விடுவதாகக் கூறிவிட்டு சிறுமி வெளியே சென்றுள்ளார்.

Advertisement

நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். எங்குத் தேடியும் சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாயமான சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in