CRIME
“நாங்க ஊருக்குப் போறோம், பால் வேண்டாம்” பக்கத்துக்கு வீட்டுக்கு போன் செய்துவிட்டு… அடுத்த நொடியே வீட்டுக்குள் காத்திருந்த பயங்கரம்.. தாயும், மகனும் எடுத்த கொடூர முடிவு..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லட்சுமிசந்த் சன்வால் காலனியில், 38 வயது தாயும் அவரது 16 வயது மகனும் தங்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்தவர்கள் சோனு கன்வர் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அவரது மகன் தக்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டின் தனித்தனி அறைகளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதிகாலை 5 மணியளவில் தக்ஷவர்தன் தனது சித்தப்பாவிற்கு தொலைபேசி மூலம் அழைக்க முயன்றுள்ளார், ஆனால் அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை. பின்னர் காலை 6 மணியளவில் பால் விற்பனையாளர் வந்தபோது, பக்கத்து வீட்டுப் பெண்மணி சோனு கன்வருக்கு போன் செய்துள்ளார்; அப்போது போனை எடுத்த மகன், “நாங்கள் ஊருக்குச் செல்கிறோம், இன்று பால் வேண்டாம்” என்று கூறியுள்ளார். மதியத்திற்கு மேல் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சோனு கன்வரின் கணவர் பன்வர் சிங் உயிரிழந்த நிலையில், அவரது ஓய்வூதியப் பணத்தை வைத்தே இந்த தாயும் மகனும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஜெய்சால்மர் காவல்துறையினர் தடயவியல் (FSL) நிபுணர்களுடன் இணைந்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
