“துப்பட்டாவால் தூக்குப்போட்டு செத்துட்டா” காதலியை கொன்றுவிட்டு காதலன் செய்த காரியம்.. திருமணம் செய்ய மறுத்த 21 வயது செவிலியர் கழுத்தை நெரித்துக் கொலை..!! – cinefeeds
Connect with us

CRIME

“துப்பட்டாவால் தூக்குப்போட்டு செத்துட்டா” காதலியை கொன்றுவிட்டு காதலன் செய்த காரியம்.. திருமணம் செய்ய மறுத்த 21 வயது செவிலியர் கழுத்தை நெரித்துக் கொலை..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் பகுதியில் காப்புக்காட்டுச் சாலையோரம் 21 வயது இளம் செவிலியர் சாக்ஷி தோஹ்ரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வந்த அவருடைய காதலர் ஆகாஷ் வாக்மரே, சாக்ஷியின் உடலின் அருகே அமர்ந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கண்டறியப்பட்டார்.

ஆகாஷ் காவல்துறையினரிடம் சாக்ஷி தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடினார். எனினும், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யாமல் தீவிர விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நிலை குலைந்த ஆகாஷ், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Advertisement

சாக்ஷி தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரைத் தானே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் ஆகாஷ் வாக்மரேவைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in