பகீர்..! நள்ளிரவில் வீட்டுக் வந்த கணவன்.. குழந்தைகளோடு அரைநிர்வாணமாக கிடந்த நபர் கொலை… தெறித்து ஓடிய மனைவி.. அம்பலமான பலநாள் ரகசியம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! நள்ளிரவில் வீட்டுக் வந்த கணவன்.. குழந்தைகளோடு அரைநிர்வாணமாக கிடந்த நபர் கொலை… தெறித்து ஓடிய மனைவி.. அம்பலமான பலநாள் ரகசியம்…!!

Published

on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 34 வயதான இஸ்மாயில் பினெடலோபஸ் என்பவர், தனது பணிமுடிந்து வழக்கத்தை விட சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள படுக்கையறையில் தனது நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன், கள்ளக்காதலன் நிக்கோலஸ் கார்சியா (28) என்பவர் அரைநிர்வாண நிலையில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது மனைவி வெண்டி, நிக்கோலஸ் கார்சியா என்ற இளைஞனுடன் திருமணத்திற்கு மீறிய ரகசிய உறவில் இருந்தது பினெடலோபஸுக்கு அன்றைய தினமே தெரியவந்துள்ளது. இதனால் கடுமையான ஆத்திரமடைந்த பினெடலோபஸ், படுக்கையறையில் இருந்த அந்த இளைஞனை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொலை செய்துள்ளார். எனினும், இந்த ஆத்திரத்திலும் பினெடலோபஸ் தனது குழந்தைகளுக்கோ அல்லது மனைவிக்கோ எந்தவித தீங்கும் இழைக்கவில்லை என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

அண்டை வீட்டினர் பினெடலோபஸை அமைதியான குணம் படைத்த ஒரு நல்ல மனிதர் என்று விவரித்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொடூரக் கொலைக் குற்றம் மற்றும் கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதற்கான கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பினெடலோபஸின் மனைவி அதுகுறித்து பேச மறுத்துவிட்டார். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பினெடலோபஸ் மீதான குற்றச்சாட்டு விசாரணை மற்றும் ஜாமீன் மறுஆய்வு ஆகியவை வரும் டிசம்பர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in