LATEST NEWS
“தினம் தினம் டார்ச்சர்” ரயில் முன் பாய்ந்து தாய், மகன் தற்கொலை… கணவரின் வெங்காய வியாபாரக் கடனால் பறிபோன இரண்டு உயிர்கள்..!!
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (30) என்பவர், தனது 10 வயது மகன் பிரதீப்புடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சூலக்கரை ரயில்வே கேட் அருகே மகனுடன் நின்று கொண்டிருந்த பாண்டிச்செல்வி, அவ்வழியாக வந்த அம்ரித் பாரத் விரைவு ரயில் முன் இருவருமாகப் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
கணவர் வெங்காய வியாபாரத்திற்காக வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தக் கோரி வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே பாண்டிச்செல்வி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
