CRIME
அடச்சீ.. வகுப்பறையில் மாணவனைத் தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சேவியர் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 41 வயதான ஆசிரியர் அருள் பாக்கியம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், ஆசிரியர் அருள் பாக்கியம் அந்த மாணவனை வகுப்பறையில் தனியாக அழைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தித் தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்துள்ளார். ஆசிரியரின் தொடர் தொல்லையால் அச்சமடைந்த மாணவன் இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகார் மற்றும் மாணவன் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் அருள் பாக்கியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மாணவனிடம் அவர் எவ்வாறு பழகினார் மற்றும் இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே இத்தகைய செயலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் பெற்றோர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
