அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி.. பயிற்சி பெண் மருத்துவரிடம் அத்துமீறிய சீனியர் டாக்டர்.. சுகாதாரத்துறையின் அதிரடி தண்டனை..!! – cinefeeds
Connect with us

CRIME

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி.. பயிற்சி பெண் மருத்துவரிடம் அத்துமீறிய சீனியர் டாக்டர்.. சுகாதாரத்துறையின் அதிரடி தண்டனை..!!

Published

on

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 47 வயதான மூத்த மருத்துவர் பினு என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பினுவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே சக பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவத்தைத் தீவிரமாகக் கருதிய கேரள மாநில சுகாதாரத்துறை, மருத்துவர் பினுவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவத் துறையினரிடையே இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in