“கோவில் நிலத்தைத் திருடுனவங்கள்ளாம்… விதிமுறைகளைப் பற்றிப் பேசலாமா..?” திமுகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கோவில் நிலத்தைத் திருடுனவங்கள்ளாம்… விதிமுறைகளைப் பற்றிப் பேசலாமா..?” திமுகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

Published

on

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதல்வருக்கு அரோகரா என முழக்கம் எழுப்பிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரசம்ஹார நிகழ்வை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததாகவும், முதலமைச்சருக்கு அரோகரா எனப் பாடியது குறித்து பாடகர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் புகழ்ச்சியை விரும்புபவர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், பாடகர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக பேசுவது ஏற்புடையதல்ல என்றும், பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது ஏற்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பாடிய பாடகர்களைக் கூத்தாடிகள் என்ற மனநிலை திமுகவினருக்கு அப்போது வரவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இறுதியாக, எந்த விதியின் அடிப்படையில் திமுக கட்சி அலுவலகத்திற்காக ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தைத் திருடினார்கள் என அமைச்சர் ரமேஷ் வினவியுள்ளார். கோவில் நிலங்களைத் திருடிய திமுகவினர், கோவில் விதிமுறைகளைப் பற்றிப் பேசி விமர்சிப்பதா என்றும் அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in