வீட்டில் செய்த நூடுல்ஸ் எமனாக மாறிய சோகம்… தூக்கத்திலேயே பிரிந்த 7 வயது சிறுமியின் உயிர்.. அக்காவும் மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீட்டில் செய்த நூடுல்ஸ் எமனாக மாறிய சோகம்… தூக்கத்திலேயே பிரிந்த 7 வயது சிறுமியின் உயிர்.. அக்காவும் மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் உள்ள மங்களம் சிட்டியில், வீட்டில் சமைக்கப்பட்ட நூடுல்ஸைச் சாப்பிட்ட 7 வயது சிறுமி பீஹு குமாவத் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமையன்று நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய இரண்டு சகோதரிகளில், மூத்த சகோதரி திவ்யான்ஷி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 வயது சிறுமி பீஹு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உணவு விஷமானதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்துத் தாயார் அளித்த புகாரின் பேரில் கர்தானி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நூடுல்ஸ் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்; பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Advertisement

உடல்நலம் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரி திவ்யான்ஷி சிகிச்சைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் சகோதரர் கோவிந்த் ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 7 வயது மகளின் திடீர் மரணம் அக்குடும்பத்தைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in