TRENDING
6 வயது சிறுமியின் துணிச்சலான செயல்…!!! காப்பாற்றப்பட்ட மொத்த குடும்பம்… காவல்துறையினரிடம் இருந்து குவிந்த வாழ்த்துக்கள் …
இந்த சிறுவயதில் நேரப்போகும் ஆபத்தை புரிந்து கொண்டு அனைவரையும் காப்பாற்றும் வகையில் முயற்சி செய்த 6 வயது சிறுமி . அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜிம்மி கார்ல்பன் , இவரது மனைவி மடலின், மற்றும் இவரது 6 வயது மகள் மடலின் கார்ல்பன், மற்றும் 2 வயது மகன் ஹண்டர். இவர்கள் நால்வரும் வசித்துவரும் வீட்டில் கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் அனைவரும் உறங்கி கொண்டு இருந்த வேலையில் அந்த வீட்டின் உள்ள பக்கத்தில் இருந்த டிவி , மற்றும் பிரிட்ஜ் திடீரென தீப்பிடிக்க துவங்கியதும் அறையில் பொருத்தப்பட்டு இருந்த புகை கண்டுபிடிப்பு சப்தம் எழும்பி உள்ளது.
அதனை கவனிக்காமல் ஆழ்ந்து உறங்கி உள்ளனர் . ஆனால் 6 வயது மகள் மட்டும் விழித்து கொண்டு தீப்பிடித்ததை கவனித்து உடனே தந்தையின் அறைக்கு ஓடி சென்று தந்தையை எழுப்பியுள்ளாள். அதற்குள் வேகமாக தீப்பற்ற துவங்கியது . கணவர் மகளை வீட்டிற்கு வெளிய அனுப்பிவிட்டு பின் வேகமாக மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டு இருக்கும் மகன் மற்றும் மனைவியை அழைத்து கொண்டு வெளியேறினார். அதற்குள் பாதி வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. பின் தீயணைப்பு வீரர்கள் வந்து உதவி புரிந்தனர்.
ஆனால் உடைமைகள் அனைத்தும் கருகிவிட்டன. மற்றபடி எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை . இதற்கு கரணம் 6 வயது சிறுமியின் தைரியம் தான். தனியாக தூங்கி கொண்டு இருந்த சிறுமி சப்தத்தை கண்டு பயப்படாமல் தனியாக தந்தை அறைக்குள் அந்த இருட்டில் ஓடி சென்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாள். இந்த ஒரு தைரியம் பாராட்டத்தக்கது என்று போலீசார் பாராட்டியுள்ளனர் சிறுமியை .
