நடுரோட்டில் நிர்வாணமாக தலைதெறிக்க ஓடிய நபர்… ஹோட்டலுக்குள் திடீரென நுழைந்த போலீசார்… நடந்தது என்ன.? பரபரப்பு வீடியோ வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுரோட்டில் நிர்வாணமாக தலைதெறிக்க ஓடிய நபர்… ஹோட்டலுக்குள் திடீரென நுழைந்த போலீசார்… நடந்தது என்ன.? பரபரப்பு வீடியோ வைரல்..!!

Published

on

ராஜஸ்தானில் போலீஸ் சோதனையின் போது ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் அதிரடியாகச் செயல்பட்டு அப்பகுதியில் உள்ள 12-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

https://www.instagram.com/reel/Da5CsAVkTia/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இந்தத் திடீர் சோதனையின் போது, அங்குள்ள ஒரு ஹோட்டலில் இருந்த நபர் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து, மிகுந்த பதற்றத்தில் ஆடைகளைக் கூட அணியாமல் ஹோட்டலை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அவ்வாறு அவர் தலைதெறிக்க நடுரோட்டில் நிர்வாணமாக ஓடியதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in