என்னை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க…! திடீரென்று போலீசில் புகாரளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னை  கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க…! திடீரென்று போலீசில் புகாரளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…!

Published

on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பெங்களூரைச் சார்ந்தவர். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர்,  தொலைக்காட்சி தொகுப்பாளர்,  தயாரிப்பாளர் என பன்முக  திறமை கொண்டவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில்  இவர் ‘காஞ்சிபுரம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்து , 2007 ஆம் ஆண்டு  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இவர் ‘இருவர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக 1998 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். தமிழ் திரைஉலகில்  தோனி, அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம், சிங்கம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பீமா என தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1994 நடிகை லலிதா குமாரி என்பவரை  மணந்தார். அவர்களுக்கு மோகனா, பூஜா என்று இரண்டு மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளார்.

Advertisement

திருமணம் ஆகி சில ஆண்டுகளில்  தனது மனைவியை விவாகரத்து செய்தார். 2010 ஆம் ஆண்டு நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இவருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். தற்பொழுது நடிகர் பிரகாஷ்ராஜ் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகாரளித்துள்ளார். இவர் சமீபகாலமாக மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கலபுரகியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு பேசும்போது, சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் யூ-டியூபில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in