GALLERY
பிரபல நடிகர் சத்யராஜின் அன்சீன் குடும்ப புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல் ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ்; இவர் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு கதாநாயகனாக மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
நடிகர் சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
அதற்காக பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார்.
நடிகர் சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சத்யராஜிற்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் சிபிராஜ் இணைந்து “வெற்றிவேல் சக்திவேல்” திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும், பல படங்களில் நடித்த சிபிராஜ், சத்யராஜ் இயக்கத்தில் உருவான லீ, நாய்கள் ஜாக்கிரதை, சத்யா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் திரை உலகில் தன் பயணத்தை 1978-ல் தொடங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார்.
இதுவரை ரசிகர்கள் யாரும் காணாத நடிகர் சத்யராஜ் குடும்பத் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.