இரண்டாவது குழந்தைக்கு ரெடியான பிரபல சீரியல் நடிகை.. முதல் குழந்தை இவ்ளோ வளர்ந்துட்டா .. இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோஸ் .. - cinefeeds
Connect with us

GALLERY

இரண்டாவது குழந்தைக்கு ரெடியான பிரபல சீரியல் நடிகை.. முதல் குழந்தை இவ்ளோ வளர்ந்துட்டா .. இணையத்தில் வைரலாகும் க்யூட் போட்டோஸ் ..

Published

on

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக், தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்திலும்  நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில்  என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் சினிமா பக்கமே வராமல் சீரியலில் நடித்து தனது திறமைகள் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

Advertisement

இவர் விஜய், ஜீ தமிழ், ஜெயா, கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஜெமினி டிவியில் ஆலா மொடலாயிந்தி சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பொன்னி (உஷா) கதாபாத்திரத்திலும்; மோதலும் காதலும் (நந்தினி) கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடனும் டான்ஸ் ஆடியும் சூட்டிங் ஸ்பாட்டில் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

இந்த வகையில் தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் ஸ்ரீதேவி தனது முதல் பெண் குழந்தையுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in