TRENDING
அட மெட்டி ஒலி சீரியல் நடிகையா இது?… கொழுக்கு மொழுக்கா இருந்த அவங்களா இப்படி மாறிட்டாங்க… இந்த நோயாள தான் இப்படி ஒரு நிலையா..??

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களிலும் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காவிரி. இவர் வைகாசி பிறந்தாச்சு என்ற திரைப்படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மெட்டிஒலி மற்றும் வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், இத்தனை நாட்களாக நான் எங்கும் ஓடவில்லை, வம்சம் சீரியலுக்குப் பிறகு என்னுடைய அம்மா இறந்து விட்டார். அப்போ நான் மிகவும் உடைந்து விட்டேன். அந்த சமயத்தில் எனக்கு திருமணம் ஆகி இருந்தது. கொஞ்சம் டைம் எடுக்கலாம் என்று யோசித்த நிலையில் பிறகு கொரோனா காலம் வந்ததால் வீட்டிலேயே இருந்தேன். பிறகு கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரு தோட்டத்து வீடு கட்டி அங்கு குடியேறினோம்.
பின்னர் ஒரு பேப்பர் வேலைக்காக சென்னை வந்தேன். திரும்ப அங்கேயே போய் விட்டேன். வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் பண்ணும் போது நான் ஸ்லிம்மாக இருந்தேன். இடையில் எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்தது. இதனால் எடை போட ஆரம்பித்தேன். பிறகு தியானம் எடுத்ததால் இன்னும் எடை அதிகரித்து விட்டது.
2010 ஆம் ஆண்டு தியானத்தை நிறுத்தினேன். அடுத்த இரண்டு மாதத்தில் 8 கிலோ எடை குறைந்தது. ஸ்லிம்மாக பல வலிகளை இங்கே சொன்னாலும் அதெல்லாம் வேஸ்ட். நாமாக உடல் எடை குறைத்தால் தான் உண்டு என அவர் பல தகவல்களை பகிர்ந்த நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறி உள்ள அவரின் லேட்டஸ்ட் புகைப்படமும் வைரலாகி வருகிறது.