LATEST NEWS
7 வருஷம் பயன்படுத்திட்டு….. குப்பை மாதிரி தூக்கி போட்டுட்டாங்க….. கதறும் பிரபல நடிகை….!!!!

சினிமாவில் எங்கு பார்த்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் யாரிடம் கேட்டாலும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிய பேச்சு தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் ஒரு கிளாமர் நடிகை தான் அனுபவித்த கொடுமைகளை ஒரு இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் சோனா. இவர் பாடலுக்கு மட்டுமல்லாமல் பல படங்களில் குணசத்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அதாவது நான் நடிக்க வரும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அழைத்ததாகவும், அப்படி செய்துதான் நான் முன்னுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டு பல படங்களில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் . ஆனால் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நபரை ஏழு வருடமாக காதலித்தேன். அந்த நபர் தன்னை 7 வருடங்களாக உடல் ரீதியாக மட்டும் பயன்படுத்தி கொண்டு என்னை டார்ச்சர் செய்துள்ளார். நான் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நபருடன் பேசியபோது அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
நிச்சயதார்த்தம் நடைபெற்றது, திருமணம் தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பிறகு இருவருக்குள் ஏதோ ஒரு காரணத்தினால் பிடிக்காமல் போனதால் கல்யாணம் நடக்கவில்லை. ஆனால் நிறைய நேரங்களில் நான் அழும்போதெல்லாம் என்னை சமாதானப்படுத்துகிறேன் என்று கூறி அவர் அவருடைய சந்தோஷத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். தனியாக இருப்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை. நிம்மதியாக இருக்கின்றேன். காதல் என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கோபமும் வெறுப்பும் வருகிறது என்று கூறினார் சோனா.