TRENDING
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு….. ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ…. வைரல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். எலிமினேட் லிஸ்டில் கடைசி இருவராக மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இருந்த நிலையில் இறுதியில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேஷன் என கார்டை காட்டி கமல் அறிவித்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.