ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அலர்ட்..! கைரேகை விழவில்லையா..? உடனே இதை பண்ணுங்க.. TN அரசு வெளியிட்ட புதிய வழிமுறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அலர்ட்..! கைரேகை விழவில்லையா..? உடனே இதை பண்ணுங்க.. TN அரசு வெளியிட்ட புதிய வழிமுறை..!!

Published

on

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண்கருவிழிப் பதிவு (e-KYC) தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிபார்ப்பு பணியின் போது, முதியவர்கள், உழைப்பாளர்கள் மற்றும் சிலருக்கு கைரேகை சரியாகப் பொருந்தாமல் e-KYC செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை முதலில் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கைரேகைத் தெளிவின்மை பிரச்சனை உள்ளவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் எல்காட் , டிஏசி டிவி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் பொதுவான ஆதார் சேவை மையங்களை அணுகலாம். அங்கு தங்களின் புதிய கைரேகை மற்றும் கண்கருவிழிப் பதிவை முறையாகப் புதுப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது விரல்ரேகை சரிபார்ப்பு e-KYC பதிவை எளிதாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தடையின்றிப் பொருட்கள் கிடைக்கவும் இந்த நடைமுறையை உடனே பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in