TRENDING
பிக்பாஸ் வீட்டில் மிமிக்ரி செய்து அசத்திய அமுதவாணனின் மகன்…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று மீதமுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.
அவ்வகையில் மைனா மற்றும் அமுதவாணன் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதில் அமுதவாணன் குடும்பத்தினர் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அமுதவாணன் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்குள் உள்ளே நுழைந்த பிறகு அமுதவாணனின் மகன் மிமிக்ரி செய்து காட்டுகிறார். அவ்வகையில் ஷிவின், அசீம், விக்ரமன் ஆகியோர் மாதிரி அவர் பேசி காட்டி நடித்து அசத்தார். அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.