CINEMA
பரபரப்புக்கு பஞ்சமிருக்காது…! பிக்பாஸ்-8 இல் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..? லீக்கான தகவல்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக்பாஸ் 8 தொடங்கயிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத விஷயம் ஒன்று நடக்கப் போவதாக கூறப்படுகிறது. அதாவது முந்தைய சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு பிக் பாஸ் குழு திட்டமிட்டு வருகிறதாம். அப்படி சர்ச்சை பிரபலங்கள் யாராவது மீண்டும் வந்தால் பிக் பாஸ்-8 இல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று இணையவாசிகள் கூறி வருகிறார்கள்.