LATEST NEWS
முதன்முறையாக பிக்பாஸ் கோப்பையுடன் விஜய் டிவி பிரபலத்தை சந்தித்த அர்ச்சனா.. அவர் இவ்ளோ ஸ்பெஷலா..? இணையத்தில் வைரலாகும் போட்டோ..!!

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக கலந்து கொண்டார். தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தவர் அர்ச்சனா.
அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து வெற்றியை கொண்டாதியுள்ளார். இந்நிலையில் அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னட்டை சந்தித்துள்ளார். தனது குருவாக நினைக்கும் பிரவீனிடம் பிக் பாஸ் கோப்பையை கொடுத்துள்ளார் அர்ச்சனா.
இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அர்ச்சனா உங்களுடைய வழிகாட்டுதல் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். நான் என்றும் உங்களது மாணவி தான். என் மீது நீங்கள் வைத்திருந்த அன்புக்கு மிகவும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram