LATEST NEWS
இவங்க இவ்வளவு மோசமானவங்களா?…. தாடி பாலாஜியின் மனைவி திடீர் கைது…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தாடி பாலாஜி. பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரின் மனைவி நித்தியாவும் கலந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சேர்ந்து வாழ்வார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தனித்தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
தாடி பாலாஜி தனது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது மனைவி மற்றும் குழந்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் தாடி பாலாஜி பிரபல டிவியில் நடுவராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் பாலாஜியின் மனைவி நித்தியா சென்னை மாதாவரம் சாவித்திரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வரும் நிலையில் இவரின் வீட்டின் எதிர்ப்புறம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த நித்யா நேற்று நள்ளிரவு எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். அது தொடர்பான சிசிடிவி காட்சியை காரின் உரிமையாளர் பார்த்த நிலையில் நித்யா மீது போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட நித்தியா சற்று நேரத்தில் ஜாமினில் வெளிவந்தார்.