GALLERY
அழகு செல்லம்.. பாரிஸ் டிஸ்னிலேண்டில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ.. இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ் இதோ..!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ.
இவர் இயக்கும் படங்களுக்கு என தனி மவுசு உள்ளது. காப்பி அடித்து படங்களை இயக்குகிறார் என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தது.
ஆனாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் அட்லீ கவனமாக இருப்பார்.
கடந்த ஆண்டு ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லீ நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை பிரியா கனா காணும் காலங்கள் சீரியல், சிங்கம் படம் ஆகியவற்றில் நடித்தவர்.
கடந்த ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி அட்லீ- பிரியா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அட்லீ,பிரியா தம்பதியினர் பிரான்சுக்கு சென்றுள்ளனர்.
அங்கு தங்களது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடமாக கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.