LATEST NEWS
அப்பவே கொண்டாடி இருந்தால்…..! ஆயிரத்தில் ஒருவன் 2, 3, 4….. செல்வராகவன் சொன்ன தகவல்….!!!!

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 2-வது பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், பார்த்திபன், ரீமாசென், அண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும் பாண்டியர்களும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த படம் வெளியான போது அந்த அளவுக்கு பெரியதாக ஓடவில்லை.
ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாட தொடங்கினர். படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க செல்வராகவன் ஆயத்தமாகி வருகிறார். ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் ஏற்று நடித்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில் தற்போது தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நானே வருவேன் படத்தை தனுஷை வைத்து இயக்கியிருந்த செல்வராகவன் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது செல்வராகவனிடம் நெறியாளர் ஒருவர் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது பெரிதாக கொண்டாடப்படவில்லை. அது எங்கள் தவறு. ஆனால் தற்போது கொண்டாடுகின்றோம். இதை பார்க்கும் போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு எப்படி உள்ளது என்று கேட்டார் . அதற்கு பதில் அளித்த செல்வராகவன் ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காத போது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படிதான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்தபோது யாரும் கொண்டாடவில்லை . அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த படம் வந்திருந்த போதே கொண்டாடியிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு, மூன்று, நான்கு பாகங்கள் வெளியாகி இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.