TRENDING
பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன? ரஜினிகாந்த் கூறிய கருத்தால் ரசிகர்கள் அடைந்த கோபம்!!!விறு விறுப்புச் செய்திகள்…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார் நடிகர்
ரஜினி காந்த்… இவர் நடிப்பில் கடைசியாக 2020 -ல் வெளிவந்த
”தர்பார் ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் ”அண்ணாத்த”திரைப்படம் உருவாகியுள்ளது…
இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சி நேற்று மாலை ஒளிப்பரப்பாகியது, இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.அதோடு பெரும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது, ஆமாம், ரஜினிகாந்த் இந்தியா ஹிந்துக்கள் அதிகம் இருக்கும் நாடு.இஸ்லாம், கிறிஸ்துவர்களுக்கு என்று நாடு உள்ளது, ஆனால், இந்தியா இந்துக்களுக்கான நாடாக பார்க்கப்பட்டது, ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என கூறியிருந்தார்.
இது ரசிகர்களிடம் கடும் சர்ச்சையை கிளப்பியது , இது டுவிட்டரில் பெரிய வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியாவை ஹிந்து மதத்துடன் குறிப்பிட்டு சொன்னது கோபப்படுத்தியுள்ளது சிலநபர்களுக்கு ..மேலும், ரஜினிகாந்த் இந்தியாவில் வறுமைகள் ஒழிய வேண்டும், எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் தண்ணீர் பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறினார்.
அது மட்டுமின்றி 70 வயதில் எப்படி இவ்வளவு இளமையாக உள்ளார் என பியர் கிரில்ஸ் ஆச்சரியமாக கேட்டார்.
அதற்கு , ரஜினிகாந்த்” ஷு நாட்-ஐ” பியர் கிரில்ஸ் போட்டு விட்டது தான் ஹைலேட்.இது மட்டுமின்றி நான் நடிக்கும் போது தான் ரஜினிகாந்த், மற்ற நேரத்தில் சிவாஜி ராவ் என சாதாரண மனிதன் தான் என்று பேசினார்.
பியர் கிரில்ஸ் ஒரு ஆச்சரியத்துடனே ரஜினியிடம் அனைத்து தகவலையும் கேட்டு வந்தது பார்ப்பவர்களுக்கு செம்ம விருந்து தான்.
இதில், ஹைலேட் என்னவென்றால்,பியர் இங்கு முதலைகள் இருக்கும் என சொல்ல, ரஜினி உடனே, தன் ஸ்டைலில் ‘அட வாய்யா போகலாம்’ என செம்ம கெத்தாக சொன்னார்… .