TRENDING
‘ஒரே கும்பத்தை சேர்ந்த 11 பேரும் ஒரே நாளில் தற்கொலை’…! பேய்வீட்டில் “குடியேறிய மருத்துவர்”… அவர் கூறிய அதிர்ச்சி..?
இந்தியா,டெல்லியில் உள்ள ஒரு பகுதி வீட்டில் இருந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். அதில் 10 பேர் தூக்கிட்டு கொண்டு வயதான ஒரு முதியவர் தரையில் படுத்தபடி சடலமாகவும் இருந்தார். குடும்பத்தை சேர்ந்து 11 பேரும் ஒரே நாளில் இறந்த இந்த சம்பவம் நம்மனதில் எப்பொழுதும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக டெல்லியில் உள்ளது. இந்த சம்பவம் 2018 டில் நடந்ததிலிருந்தே அந்த வீட்டில் யாரும் குடிப்போகவில்லை .மேலும் அதனை அனைவரும் பேய் வீடு என்றே அழைக்கின்றனர் .
மேலும் அவர்களின் மரணத்தை குறித்து விசாரித்ததில் அவரது உறவினர் கூறியது அவர்கள் அனைவரும் நங்கள் சொர்கத்தை பார்க்க போகிறோம் என்று கடிதம் ஒன்றி தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர். மேலும் அந்த வீட்டில் இறந்த 11 நபர்கள் நராயணி தேவி (77), லலித் (45), புவனேஷ் சிங் (50), டினா (42), சவீதா (48), நீத்து (25), மனிகா (23), துருவ் (15), சிவம் (15), ப்ரதீபா (48), பிரியங்கா (33) ஆகியோரே இவ்வாறு இறந்தார்கள்.
மேலும் தற்பொழுது அந்த வீட்டிற்கு சொந்தக்கார உறவினர் ஒருவரே அதனை பாதுகாத்து வருகிறார் . தற்பொழுது அந்த வீட்டிற்கு குடியேற ஒரு மருத்துவர் ஒப்புக்கொண்டு அவர் அந்த வீட்டில் சில பூஜைகளை செய்து பின்பு தற்பொழுது 3 நாட்கள் ஆகிறது . அந்த வீட்டில் அவருடன் சேர்த்து 7 பேர் தங்கி இருக்கிறார்கள். மேலும் அந்த வீட்டில் தற்பொழுது குடியேறிய மருத்துவர் மோகன் சிங் கஷ்யப் என்ற மருத்துவர் Dhruv Diagnostic laboratory என்ற மருத்துவ ஆய்வகத்தை அந்த வீட்டில் தொடங்கியுள்ளார்.
அவர் ஆய்வுமையங்கள் தொடங்கிய அந்த புராரி பகுதியில் இதுவரை சில பேர் மட்டுமே ஆய்வுக்கு வந்துள்ளனர். மேலும் இதுவரை எந்த ஒரு அமானிஷ்யமும் அவர் அந்த வீட்டில் கண்டது இல்லை என்று தெரிவித்தார். அனைவரும் மூடநம்பிக்கையில் இதுவரை இந்த வீட்டை பற்றி தவறான எண்ணத்தில் இருக்கிரார்கள் .ஆனால் அப்படி ஒன்றும் இதுவரை எனக்கு தெரியவில்லை என்று அந்த மருத்துவர் கூறிஉள்ளார்.